Breaking News

திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மங்கலத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற மக்கள் சங்கமம் மாநாடு!

1பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 110 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக திருப்பூர் மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக மங்கலத்தில் மக்கள் சங்கமம் மாநாடு 19-04-2015 அன்று நடைபெற்றது.

இம்மாநாட்டிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருப்பூர் மாவட்ட தலைவர் முபாரக் பாஷா அவர்கள் தலைமை தாங்கினார்.

இம்மாநாட்டில் மக்கள் சங்கமத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களை கவுரவிக்கப்பட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் ஜெயிலாப்தீன் அவர்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் முகைதீன் அப்துல் காதர் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

2 3 4 5 6 7 8 9 10 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *