Breaking News

மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு கோவை மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி!

1பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் 110 இடங்களில் மக்கள் சங்கமம் மாநாடு நடைபெற இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக நடைபெற இருக்கும் மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு இன்று (23-04-2015) கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S.இஸ்மாயில், மாநில பொருளாளர் T.M.இப்ராஹிம் பாதுஷா மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

2 3 4 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *