Breaking News

2007 அஸ்ஸாம் வெள்ளப் பெருக்கு : நிவாரண பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்

20120804133056இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கடந்த பல நாட்களாக பருவமழை தீவிரமடைந்து வருகின்றது.
இதேபோல் இந்தியாவிலன் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய பருவமழையினால் அஸ்ஸாம் மக்கள் ஒரு பெரும் இழப்பை சந்தித்து இருக்க இடமில்லாமலும், உணவுப்பற்றாக்குறை உடை என எல்லாவற்றையும் இழந்து குடிக்க குடிநீர்கூட இல்லாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
வழக்கமாக மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும் பருவமழை சில பாதிப்புகளை ஏற்படுத்துவது வழக்கம்தான் என்றாலும் இம்முறை பெய்த பலத்த மழையினால் மூன்று மாதத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று முறை ஏற்பட்ட திடீர் வெ ள்ளத்தால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு சொல்லொனாத் துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
2001 ஆண்டு கணக்கெடுப்பின்படி அஸ்ஸாமின் மொத்த மக்கள் தொகை 2,66,38,407 இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 21 மாவட்டங்களில் கேச்ஹார், கரீம் கன்ஜ், ஹைலாகன்படி, துப்ரி, மேரிகான், பார்பீடா, கோல்பாரா, மோங்கிகான், நாகோன் என்ற 9 மாவட்டங்கள் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதியாகும்.
அஸ்ஸாமுடைய மக்கள் தொகையில் அரசு தரும் புள்ளி விவரப்படி முஸ்லிம்கள் 31 சதவிகிதம் வாழ்ந்து வருகின்றனர். 70க்கும் மேற்ப்பட்ட மக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். 9000 கிராமங்களில் வசித்து வரும் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 9 மாவட்டங்களில் மட்டும் 25 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 300க்கும் மேற்ப்பட்ட பள்ளிவாசல்களுக்கும் 450 மக்தபுகள் (மதரஸாக்களும்) கடுமையாகப் பாதிக்கப்பட்டு சிதிலமடைந்துள்ளன.
இன்னும் வேதனையான விஷயம் என்னவென்றால், பார்காடா, போங்கிகான் என்ற மாவட்டங்களில் 1993 – 94 ல் நடந்த இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் ஏற்கனவே தற்காலிக அகதிகள் முகாமில்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். இப்போது அவர்களின் அனைத்து முகாம்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
அவர்கள் இப்போது தெருவோரங்களில் உடுக்க உடையின்றி உண்ண உணவின்றி, சுகாதாரனமான குடிநீர்கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.
அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் உதவித்தொகை போதுமானதாக இல்லை, அவர்கள் கொடுக்கும் உதவித்தொகையும் இன, மொழியை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படுவதால் வழக்கம் போல் முஸ்லிம்களுக்கு ஒன்றும் போய் சேருவதில்லை.
ஆஸ்ஸாம் முதல்வர் தருன்கோகோய் அவர்களிடம் இவர்களுக்கு எப்போது நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று கேட்டால் எனக்குத் தெரியாது என்கிறாராம்.மத்திய அரசுதான் இதற்கு பதில் சொல் வேண்டும். எங்களிடம் போதுமான நிதி ஆதாரம் இல்லை என்ற மத்திய அரசை நோக்கி கையை நீட்டியுள்ளாராம் முதல்வர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்கும், பள்ளிவாசல்களையும், மதரஸாக்களையும் சரி செய்வதற்கும் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து குறிப்பாக, உடை, உணவு, குடிநீர் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதற்காக சில சமூக நல இயக்கங்கள் ஒன்றிணைந்து அஸ்ஸாம் துயர் நீக்கும் அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் அபூபக்கர் அவர்கள் அஸ்ஸாம் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். பின் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறதல் கூறினார்.
பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களின் கஷ்டங்களைக்களையும் திர்க்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இந்தியா முழுவதும் ஒரே நாளில் பொதுமக்களை சந்தித்து நல்ல தரமான உபயோகப்படக் கூடிய சேலை, வேஷ்டி, பனியன் போன்றவைகளை சேகாpத்து அஸ்ஸாம் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *