Breaking News

கஷ்மீரில் பாப்புலர் ஃப்ரண்டின் நிவாரணப் பணிகள் தீவிரமடைகின்றது

2221கஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிவாரணக் குழு ஸ்ரீநகர், பட்ஹாம், அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு நவீன சமூக இயக்கமாகும். தற்பொழுது, 20க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அடித்தட்டு மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அதிகார ரீதியாக சக்திப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், குடிமக்களின் அடிப்படை உரிமைக்காகவும் தன்னுடைய குரலை தொடர்ந்து சமூக களத்தில் அழுத்தமாக பதிவு செய்து வருகின்றது. அதேப்போன்று, நாட்டில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு போன்ற நேரங்களில் சிறிதும் தாமதிக்காமல் நிவாரணப் பணிகளில், மக்களின் துயர்துடைக்க களம் இறங்கிவிடும் செயலாற்றும். கடந்த வாரம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரிவான நிவாரணப் பணியாற்றும் என்று அறிவிப்பு செய்தது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கஷ்மீர் மக்களுக்காக நிவாரணத் பொருட்களை பொதுமக்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்தனர். கஷ்மீர் மக்களின் துயரங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய பொருளாதாரங்களை வழங்கி உதவி செய்தனர். அதன் ஒரு பகுதியாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கஷ்மீரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிந்து, கணக்கெடுப்பின் மூலம் துரிதமாக நிவாரணங்கள் வழங்க வேண்டிய மக்களுக்கு உதவி செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய தலைவர் கே.எம். ஷெரீஃப், ஸ்ரீநகரில் உள்ள ஃபெமினா ஃபிர்தவ்ஸியா மஸ்ஜிதில் இருந்து தொடங்கி வைத்தார். இந்த நிவாரண குழு, ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும், ஒரு மாதத்திற்கு பயன்படும் அளவுக்கு வழங்கியுள்ளது. இதில், 20 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, 2 கிலோ சமையல் எண்ணெய், 500 கிராம் டீ தூள், 10 பாக்ஸ் தீப்பெட்டி, ஒரு பாக்ஸ் மெழுகுவர்த்திகள், 400 கிராம் பால்பவுடர், ஒரு கிலோ பருப்பு, 200 கிராம் சில்லி பவுடர் மற்றும் ஒரு கிலோ உப்பு பாக்கெட் போன்றவைகள் அந்த நிவாரணப் பொருட்களில் அடங்கும். முதல் கட்டமாக, ஸ்ரீநகர் மாவட்டத்தில் மட்டும் 1,200 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 3,600 உபகரணங்கள் விரைவில் விநியோகிக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல், ஸ்ரீநகரில் மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் நிவாரணக் குழுவின் ஒருங்கிணைப்பாளர், அன்ஸாருல் ஹக் கூறும்போது, எதிர்வரும் குளிர்காலத்தை கருத்தில் கொண்டு மக்களுக்கு பயன்தரும் வகையில் குளிரை தாங்கக்கூடிய 50 தற்காலிக குடில்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அங்குள்ள அரசு அதிகாரிகள் அனுமதி தரும் பட்சத்தில் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *