காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிதி சேகரிப்பு
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து ஜும்மா பள்ளி வாசல்களிலும் 19.09.2014 இன்று நிதி வசூல் செய்யப்படுகின்றது. வசூல் செய்யப்படும் நிதியை கொண்டு வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ள காஷ்மீர் மக்களுக்கு தேவையுள்ள பொருட்களை மொத்தமாக பெற்று அங்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதை அடுத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ள ஜும்மா பள்ளிவாசலில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.