Breaking News

கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற சிறுபான்மை மாணவ, மாணவிகளுக்கான கல்வி கடன் உதவி வழங்கும் முகாம்

20151004194042மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கையும், சச்சார கமிஷன் அறிக்கையும் முஸ்லிம் சமூகத்தின் கல்வி, பொருளாதார மற்றும் சமூக சூழல் மிகவும் பின்தங்கியுள்ளதாக வேதனையுடன் சமர்பித்தார்கள். பா.ஜ.க அரசால் சச்சார் கமிட்டியின் அறிக்கையை மதிப்பாய்வு செய்வதற்கு நியமிக்கபட்ட போராசிரியர். அமிதாப் குண்டு தலைமையில் கமிட்டி தனது அறிக்கையை கடந்த ஆண்டு செப்டம்பர் 29ல் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா அவர்களிடம் சமர்பித்தது. சச்சார் கமிட்டியின் தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்கள் சரி என்றும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு போதுமான இட ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பதை மீண்டும் இக்கமிட்டி வலியுறுத்தி உள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சிறுபான்மை சமூகத்தின் உரிமை பெற்று தருவதில் தொடர்ந்து போராடும் இயக்கமாக தேசிய அளவில் செயல்படுகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் பள்ளி செல்வோம் என்ற பிரச்சாரத்தின் மூலம் கல்வி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும், சர்வ சிக்ஷா கிராம் என்கிற முழுமையான கல்வி கிராமத்தை ஏற்படுத்துதல், ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற எண்ணற்ற கல்வி சேவை செய்வதில் பாப்புலர் ஃப்ரண்ட் முன்னணியில் நிற்கிறது.

q1 q2 q3 q4 q5 q6 q7

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த 5 ஆண்டுகளாக கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு கல்வி கடன் உதவிகள் வழங்கப்படுகின்றது. இந்த உதவி அவர்களுக்கு ஊக்கம் அளிக்க கூடியதாகவும், பொருளாதார சிரமத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கு உதவியாகவும் இருந்து வருகிறது. முதலில் 3 இலட்சமாக 2010 ஆம் ஆண்டில் துவங்கி 2011 கல்வி ஆண்டில் 7 இலட்சமாகவும் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் அதிகப்படியான தேவையுடைய மக்களை உதவிகள் சென்றடையும் பொருட்டு உதவிகள் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2014 ஆம் ஆண்டில் 15 இலட்ச ரூபாய் 191 மாணவ, மாணவிகளுக்கு வழங்கியும் இந்த ஆண்டு (2015) 17 இலட்ச ரூபாய் வழங்கவும் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் அதிக பயனாளிகள் பயன் பெறுவார்கள். தமிழகம் முழுவதும் 7 பகுதிகளில் இந்த நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் இன்று (27-09-2015) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடலூர் மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் B.E., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மண்டல தலைவர் நியாஸ், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் பயாஸ் அஹ்மது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் மவ்லவி ஆபிருத்தீன் மன்பயீ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களிடத்தில் ஆர்வமூட்டி உரை நிகழ்த்தி கல்வி உதவித்தொகை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் மங்கலம்பேட்டை பைத்துல்மால் & வட்டியில்லா வங்கியின் தலைவர் ஹாஜி அப்துல் பாரி,வழக்கறிஞர் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இம்முகாமில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட நிர்வாகிகள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *