Breaking News

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் – உயர்கல்வி கடனுதவி திட்டம் 2015-16

20150730140847முஸ்லிம்கள் மற்றும் பிற வஞ்சிக்கப்பட்ட வகுப்பினரை சக்திபடுத்துவதன் வாயிலாக தேசத்தை சக்திபடுத்திட முனையும் நவீன-சமூக இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இதன் அடிப்படையில் 5 வது ஆண்டாக உயர்கல்வி கடனுதவி திட்டத்தை பயன்படுத்தி கொள்ள பாப்புலர் ஃப்ரண்ட் அறிவித்துள்ளது.

கல்வி கடனுதவிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான தகுதிகள்

 
1) 12ம் வகுப்பு முடித்து டிகிரி அல்லது டிப்ளமோ அல்லது பிற படிப்புகளை படிக்க விரும்பும் நல்ல
 
மதிப்பெண்கள் பெற்ற பொருளாதார தேவையுடைய மாணவர்கள்.

2) மாஸ்டர் டிகிரி பயிலக்கூடிய மாணவர்களும் தகுதியானவர்களே.

3) சட்டம் அல்லது பத்திரிகை துறை மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
 

இக்கல்வி உதவி ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் வட்டியில்லா கடனாக வழங்கப்படுவதால், இதன் மூலம் பயன்பெறும் மாணவர்கள் வேலையில் சேர்ந்த பின்போ அல்லது படிப்பு முடிந்துஇரண்டு வருடங்கள் நிறைவடைந்த உடனோ சுலப தவணை முறையில் இவ்வுதவியை திரும்ப செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிய விண்ணப்பதாரர்கள் – நேர்முக தேர்வின் போது சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1. முகவரி சான்றின் பிரதி

2. 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழின் பிரதி

3. பிற தகுதித்தேர்வு மதிப்பெண் சான்றிதழின் பிரதி (இருக்குமாயின்)

4. சேர்க்கை கடிதத்தின் பிரதி

5. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் (35mm x 35mm)

6. மாணவ/மாணவியரின் வங்கி கணக்கு விபரங்களின் பிரதி

புதுப்பிப்பவர்களுக்கு – நேர்முக தேர்வின் போது சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள்

1. பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்று (Bonafide Certificate)

2. கடந்த வருடத்தின் மதிப்பெண் சான்றிதழ்

3. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் (35mm x 35mm)

4. மாணவ/மாணவியரின் வங்கி கணக்கு விபரங்களின் பிரதி(Bank Pass Book)

 

· விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2015.

· தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட்/செப்டம்பர் மாதங்களில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

· உதவித்தொகை இரண்டு தவணைகளாக பகிர்ந்து தரப்படும். (தோராயமாக செப்டம்பர் மற்றும் டிசம்பரில்).
ஒவ்வொரு மாணவரும் 10 ரூபாய் மதிப்புள்ள முத்திரை தாளில் கையொப்பமிட வேண்டும், மேலும் சமூக தலைவர்களில் இருவரோ அல்லது உள்ளூரில் இருக்கும் நமது இயக்க தலைவர்களோ கியாரன்டி கையெழுத்திட வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.popularfrontindia.org என்ற இணையமுகவரியில் விண்ணப்பிக்கலாம் அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமயகத்திற்கு தபாலின் வழியாக அனுப்பலாம். மேலும் popularfrontscholarship@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம். புதுப்பிக்கும் மாணவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்ப படிவத்தை தபாலின் வாயிலாக அனுப்ப வேண்டிய முகவரி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
புதிய எண் : 33, பழைய எண்: 2,
மூன்றாவது தளம், மூகாத்தாள் தெரு,
புரசைவாக்கம், சென்னை – 600 007
தொடர்புக்கு தொலைபேசி : 044 – 6461 1961.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *