Breaking News

சேலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற பள்ளி செல்வோம் மாநில துவக்க விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி!

20150603134629பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த 5 ஆண்டுகளாக “School Chalo (பள்ளி செல்வோம்)” என்கிற தலைப்பில் தேசிய அளவில் பிரச்சாரம் மற்றும் களப்பணிகள் செய்து வருகிறது. இந்திய தேசத்தில் அனனத்து சமூகமும் அடிப்படை கல்வி பெற்ற நிலையை அடைய உதவி செய்வதே இப்பிரச்சாரத்தின் நோக்கமாகும். சமீபத்தில் வெளிவந்த ‘மில்லினியம் இந்தியா எஜூகேஷன் ஃபோரம்’ ( MIEF ) என்கிற அமைப்பின் கணகெடுப்பின் படி நமது நாட்டில் குழந்தைகளில் 4% பள்ளிக்கே சென்றதில்லை, 58% தொடக்க கல்வியை முடித்ததில்லை, 90% பள்ளி கல்வியை நிறைவு செய்ததில்லை. இந்த நிலையை மாற்ற அரசுடன் இணைந்து பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் இது போன்ற பின்தங்கிய நிலையை மாற்ற தொடர்ந்து களப்பணியை செய்து வருகிறது. இவ்வாண்டும் ஜனவரி-மாரச் மாதத்தில் மேற்கு வங்கம், பிஹார், ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் மணிப்பூர் மாநிலத்தில் இப்பிரச்சாரம் முடிவு பெற்றுள்ளது. மே மற்றும் ஜுன் மாதத்தில் தென் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இப்பிரச்சாரத்தில் கல்வி பணியில் தன்னார்வ தொண்டர்களுக்கு பயிற்சியளித்தல், கிராமங்களில் கல்வி கணக்கெடுத்தல், பள்ளி படிப்பை இடையில் விட்டவர்களை பள்ளியில் சேர்த்தல், பெற்றோருக்கான குழந்தை வளர்ப்பு வழிகாட்டி முகாம்கள், விழிப்புணர்வு பேரணிகள், கல்வி உபகரணங்களை வழங்குதல் போன்ற களப்பணிகள் மற்றும் முகாம்கள் மூலம் பிரச்சாரத்தை செய்து வருகிறோம்.
b

தமிழ் மாநில பிரச்சாரத்தின் துவக்க நிகழ்ச்சியை சேலம் மாவட்டத்தில் நடத்த பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழுவில் தீர்மாணிக்கபட்டது. அதன் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக பள்ளி செல்வோம் 2015 மாநில துவக்க விழா மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேலம் மாநகர் மேட்டுத் தெரு பகுதியில் உள்ள லால் மஹாலில் ஜூன் 02, 2015 அன்று மாலை 05.30 மணிக்கு நடைபெற்றது.

bb

bbb

bbbb

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட தலைவர் N. சையது அலி அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.A. முஹம்மது இஸ்மாயில் அவர்கள் தொகுப்புரை வழங்கினார். SDPI கட்சியின் மாநில துணைத்தலைவர் அம்ஜத் பாஷா, சேலம் திப்பு இஸ்லாமிய உயர்நிலைப்பள்ளி தாளாளர் A.S. சௌகத் சலாமுல்லா, சேலம் ஜாமியா மஸ்ஜித் நாயப் முத்தவல்லி ஹாஜி J. சேக் பரீத், ஜனாப் சரீப் பாஷா, SDPI கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் B. முஹம்மது ரஃபி, SDPI கட்சியின் சேலம் மாவட்ட பொதுச்செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A. முஹம்மது ஃபயாஸ் M.SC., அவர்கள் துவக்க உரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் A. ஹாலித் முஹம்மது அவர்கள் சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து ஏராளமான ஏழை மாணவ / மாணவிகளுக்கு கல்வி உபகரணங்ள் வழங்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் A. முஹம்மது இப்ராஹிம் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *