Breaking News

கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் வழங்கிய கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

20150228202126பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொருளாதார சூழல் மற்றும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்ய பட்ட மாணவ, மாணவியர்களுக்கு தமிழகம் முழுவதிலும் நிகழ்சிகள் ஏற்பாடு செய்யபட்டு உயர்கல்விக்கான உதவித்தொகைகள் வழங்கபட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று (28-2-2015, சனிக்கிழமை) பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டு துறையின் சார்பாக ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் தெற்கு மாவட்டத்தலைவர் K.முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.
dsc_0074

இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொருளாளர் T.M.இப்ராஹிம் பாதுஷா அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை வழங்கினார்.

11009200_1579417518969961_8820017746539522794_n

11008394_1579417522303294_5547993010906425144_n
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது பயாஸ், பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்ட சமூக மேம்பாட்டு துறை பொறுப்பாளர் முஹம்மது ஹனீப், Dr.ஜுபைர் அஹமது. 82 வது வார்டு SDPI கவுன்சிலர் முஹம்மது சலீம் மற்றும் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *