Breaking News

பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய துணை தலைவர் பங்கேற்ப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட வெள்ள நிவாரண குழு காஷ்மீரில் முகாமிட்ட அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருத்துவம் வழங்கியதுடன் குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட குழந்தைகளுக்கு அமெரிக்காவின் தலைசிறந்த மருத்துவரான ஜமீல் அக்தர் அவர்களைக் கொண்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மருத்துவ முகாம்களை நடத்தியது.

இதனை தவிர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைமையின் கீழ் இயங்கிய காஷ்மீர் வெள்ள நிவாரண குழு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று அங்கு ஏற்பட்டுள்ள சேதாராத்தைப் பற்றி கள ஆய்வு செய்து தேசிய தலைமைக்கு அனுப்பியது. அதன் அடிப்படையில் காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை உயிர்பிக்கும் வண்ணம் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சரிசெய்து கொடுப்பது என முடிவு செய்து அதற்கான நிவாரண நிதி திரட்டும் பணியில் தேசம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா களமிறங்கியது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பாட்டுத் துறையின் மூலம் ஏற்கனவே செயல்படுத்திக்கொண்டிருக்கும் திட்டமான வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்கும் பணிகள் நடைபெற்றன. தற்போது இத்திட்டத்தின் கீழ் 271 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வீடில்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் முழுவதும் நிறைவடைந்துள்ள 271 வீடுகளைபயனீட்டார்களுக்கு கொடுக்கும் முகமாக துவக்க விழா நிகழ்ச்சி கோல்கம் மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணை தலைவர் பேராசிரியர் கோயா சாஹிப் அவர்கள் 271 வீடுகளுக்கான சாவிகளை கோல்கம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் திரு.நிஸார் ஹுசைன் அவர்களிடம் வழங்கினார். 271 வீடுகள் நிறைவடைந்ததை தொடந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அடுத்த கட்டமாக 351 வீடுகளை இலாக்காக வைத்து செயல்படுத்துக்கொண்டிருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *