பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்
இந்தியாவின்
சமூக எழுச்சி
மாநாடு
-2010
வாருங்கள் எழுச்சியின்
பங்காளர்களாக..!
பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர்
முஹம்மது அலி ஜின்னா தலைமையில்
30-10-2009 அன்று நடைபெற்றது.
அதில் கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கையில் போர் ஓய்ந்த விட்ட நிலையில் அகதி முகாம்களில்
வசித்து வரும் ஈழத்தமிழர்களை மழைகாலம் நெருங்கிவரும் சூழலில்
விரைவான முறையில் அவர்களின் சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தி
அவர்களுடைய நிகழ்கால வாழ்வுக்கு தேவையான பொருட்களை வழங்கிட
வேண்டும். மேலும் அவர்களின் வருங்காலத் தேவைகளை நிறைவேற்றும்
பொருட்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அமைதிமிக்க
வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என இச்செயற்குழு
கேட்டுகொள்கிறது.
கோவையில் தமிழக அரசு சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ்
செம்மொழி மாநாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்
மாநில செயற்குழு வரவெற்கின்றது.
டிசம்பர்
6-ஐ ஃபாசிஸ எதிர்ப்பு தினமாக அறிவிப்பது என்றும்,
அந்நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாபரி
மஸ்ஜித் பற்றிய கருத்தரங்கம் நடத்துவது என்றும் தமிழகம்
முழுவதும் போஸ்டர் பிரச்சாரம் செய்வது எனவும்
தீர்மானிக்கப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகிற
20,21பிப்ரவரி - 2010-ல் மாநிலம்
தழுவிய மாநாடு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
விளம்பரங்கள்:-
கையேடு
(ப்ரௌச்சர்):
சுவர் விளம்பரங்கள்:
பாக்கெட்காலண்டர்
நோட்டிஸ்
மதுரை சமூக எழுச்சி
மாநாட்டிற்கான அலுவலக திறப்பு விழா